Tamil Ramayana Story * Full Episodes * பாட்டி சொல்லும் ராமாயணம் by அம்பிகா தவசையன்.
DB Vibes DB Vibes
1.14K subscribers
4,340 views
0

 Published On Aug 9, 2024

கம்பராமாயணம் எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும் (வெவ்வேறு நூல்களிலும் பல வேறுபாடுகள் உண்டு).
இது வடமொழியில் வால்மீகி இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் தன் புலமையை வெளிக்காட்ட தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ் சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.


கம்பர் இந்த நூலை இயற்றிய பிறகு எண்ணற்ற இராமாயண நூல்கள் படைக்கப்பட்டன. இவ்வாறு இராமாயண நூல்கள் தோன்றுவதற்கு கம்பராமாயணம் தூண்டுதலாக இருந்தது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவையாவன, தக்க ராமாயணம்,குயில் ராமாயணம், இராமாயண அகவல்,கோகில இராமாயணம்,அமர்த இராமாயணம், இராமாயணக் கீர்த்தைகள் மற்றும் பால இராமாயணம்.

தாம் இயற்றிய இந்நூலிற்கு கம்பர் முதலில் இராமவதாரம் என்றே பெயரிட்டிருந்தார். ஆனால் இராமாயணம் பலரால் இயற்றப்பட்டதால் கம்பரின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது.

watch all episodes in one video.. share your valuable comments .
Thank you 😊 🙏

show more

Share/Embed